Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM

கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் - ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை இணையத்தில் பதிவு செய்ய வசதி :

கிருஷ்ணகிரி / நாமக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் (16-ம் தேதி) ஜமாபந்தி நடைபெற உள்ள தால், இணையதளம் வழியாகபொதுமக்கள் மனுக்களை அனுப்ப அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (16-ம் தேதி) முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக அலுவலர்களிடம் நேரடியாக மனுக்களை அளிக்காமல், https://gdp.tn.gov.in/jama bandhi/ என்ற இணையதளம் வழியில் மனு அனுப்ப வசதிகள் செய்யப் பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இ-சேவை மையம் மூலம் வரும் ஜூலை 31-ம் தேதி வரை மனுக்களை அனுப்பி வைக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதே இணையதள முகவரியில் வரும் 22-ம் தேதி முதல் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x