

திருப்போரூர் அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத் துக்கு, எய்டு இந்தியா அமைப்பின் சார்பில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் படுக்கைகள், கட்டில் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங் கப்பட்டன.
திருப்போரூர் அரசு மருத்துவ மனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங் கப்பட்டுள்ளது. இதில், படுக்கை வசதிகளை மேம்படுத்தும் வகை யில் எய்டு இந்தியா அமைப்பின் சார்பில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் 10 கட்டில், படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், என் 95மாஸ்க், பிபி கிட், எடை சரிபார்க் கும் கருவி, கையுறை, குளுகோஸ் ஸ்டேண்ட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி எய்டு இந்தியா அமைப்பின் ஒன்றிய திட்ட மேலாளர் விமலாதலைமையில் நேற்று நடை பெற்றது.
இதில், மேற்கண்ட மருத்துவ உபகரணங்களை திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி முன்னிலையில், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மைதிலியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் சங்கர், மருத்துவர் அனுசுயா, தலைமை செவிலியர் சரவணகுமார், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஒன்றியத் தலைவர் லிங்கன், சிஐடியூ மாவட்டச் செயலர் பகத்சிங் தாஸ் மற்றும் மேற்கண்ட அமைப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.