Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாநிலஇளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமுதாய வளர்ச்சிக்கு சேவைஆற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. 15 முதல்35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருதுரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31-ம் தேதி 35 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.

2020-2021-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும்ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x