

கடலூர் மாவட்டத்தில் தேவ னாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, நல்லவாடு, ராசாப் பேட்டை, முடசல் ஓடை, கிள்ளை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம்தேதி முதல் 60 நாட்கள் தமிழ கத்தில் மீன்பி தடைக்காலம் அறி விக்கப்பட்டது.
இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள்ஈடுபட்டிருந்தனர். மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அதிகலையில் 46 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு பூஜை செய்து ஆர்வத்துடன் கடலுக்கு சென்றனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மட்டும் கடலுக்கு செல்லவில்லை.
வரும் 20-ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் தலைமையில் எம்எல்ஏ, அதிகாரிகள், மீனவர்கள் கூட்டம் நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீன வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரியிலும் நேற்றுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிந்தது. மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.