

மதுரை மாவட்ட காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, `பேர்ட்' நிறுவனம் ஆகியன இணைந்து `நம்பிக்கை' என்ற நிகழ்ச்சி மூலம் கல்வி, உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
மதுரை திருநகர் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலை மையில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் முன்னிலையில் கல்வி கற்பதன் அவசியம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, காப்பக குழந்தைகள் தயாரித்த கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டு டிஎஸ்பி வினோதினி பாராட்டினார்.
குழந்தைகளுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள். வரதராஜன், குமார், `பேர்ட்' நிறுவன ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காப்பக நிர்வாகி கேத்ரின் வரவேற்றார். சிறுமி லேகா நன்றி கூறினார்.