திண்டுக்கல் மாம்பழ குடோன்களில் - அதிகாரிகள் திடீர் சோதனை :

திண்டுக்கல் மாம்பழ குடோன்களில் -  அதிகாரிகள் திடீர் சோதனை :
Updated on
1 min read

திண்டுக்கல்லில் கார்பைட் கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நத்தம் பகுதியில் அதிக பரப்பில் விளையும் மாம்பழங்கள் மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விளையும் மாம்பழங்கள் அதிகளவில் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றை மொத்தமாக வாங்கி குடோன்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

திண்டுக்கல் மாம்பழ குடோன்களில் செயற்கையாக மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேயுள்ள மாம்பழ குடோன்களில் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.

உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையில் கார்பைட் கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றவா என சோத னையிட்டனர்.

வாழைப்பழ குடோனிலும் சோதனை நடந்தது. சோத னையில், எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து கார்பைட் கற்களை வைத்து செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழ விற்பனையாளர்களை எச்சரித்தனர். ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்ததை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in