

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அவசிய பராமரிப்புப் பணி இன்று (16-ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், வெம்பாக்கம், சித்தாமூர், நமண்டி, வெள்ளகுளம், குத்தனூர், கரந்தை, காகனம், வெங்களத்தூர், மேலேரி, சுமங்கலி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.