கரோனா கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு :

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அயல்நாட்டு மதுபானக் கடையில் மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுப்  பிரியர்கள்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அயல்நாட்டு மதுபானக் கடையில் மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுப் பிரியர்கள்.
Updated on
1 min read

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்ததால், காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

பெரும்பாலான கடைகளில் மதுப் பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மதுபானங்கள் கிடைக்கவில்லை. கடைகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மது வகைகள் காலியானதால், கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மதுப் பிரியர்கள் எதிர்பார்த்த மதுவகைகள் இல்லாததால் சில கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறும்போது, "ஊரடங்கு காரணமாக திறக்கப்படாமல் இருந்த கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள மது வகைகளை மட்டும் விற்பனை செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். புதிய மதுவகைகள் இன்று முதல் கடைகளுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in