விழுப்புரத்தில்  தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர் இயக்கத்தினர் போராட்டம் :

Published on

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சில மறை மாவட்டங்களில் பேராயர், ஆயர் பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையிலும், சமத்துவத்தின் அடிப்படையிலும் தலித் கிறிஸ்தவ பேராயர், ஆயர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்திய ஆயர் பேரவை, தமிழ்நாடு ஆயர் பேரவையில் நிகழும் சாதிய தீண்டாமை போக்கு, சமத்துவமின்மை, சாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் விழுப்புரம் நாப்பாளைய தெருவில் உள்ள தேவாலயம் அருகே கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 71 சதவிதமாகும். எனவே உயர்பதவிகளிலும், கிறிஸ்தவ நிறுவனங்களிலும் தலித் கிறிஸ்தவர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in