குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீடு :

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீடு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தின் பூங்காவனம் உண்டு உறைவிட மையத்தில், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட முதன்மை மேலாளர் மோகனவேல் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் சக்திவேல், குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஸ்டிக்கரை வெளியிட்டார். அவர் பேசும்போது, ``குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைல்டு லைன் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in