Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

உரிகம் பகுதியில் சாலை அமைக்க தளி எம்எல்ஏ ஆய்வு :

அஞ்செட்டி வட்டம் உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிலிக்கல் கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் அச்சாலையை பார்வையிட்டார். உடன் மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் கிராம மக்கள்.

ஓசூர்

அஞ்செட்டி வட்டம் உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிலிக்கல் கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக தளி எம்எல்ஏ மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற் கொண் டனர்.

உரிகம் ஊராட்சிக்குட்பட்ட பிலிக்கல் தக்கட்டி, உடுபு ராணி உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உரிகம் ஊராட்சியில் புதிய தார்சாலை அமைக்க தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட வன அலுவலர் பிரபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தக்கட்டி முதல் உடுபுராணி கிராமம் வரை சுமார் 2.10 கிமீ தூரமும், உரிகம் முதல் பிலிக்கல் கிராமம் வரை சுமார் 3 கிமீ தூரமும் தார்சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், அஞ்செட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x