

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2.80 கோடி மோசடி தொடர்பான வழக்கை தொடர்ந்து மின்வாரிய ஊழியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் கணேசன். இவர் மத்தூர் கிராம பிரிவில் மின்வாரிய வசூல் தொகையை முறையாக செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட போது ரூ.2.80 கோடி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கணேசன், கணக்குப் பிரிவு பணியாளர் செல்வம் ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர்கள் இருவரையும் மின்வாரிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.