2021-ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :

2021-ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :
Updated on
1 min read

தலைச்சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சார்யர் விருது, ராஷ்ட்ரீய கேல் புரோஷஹன் புரஸ்கார் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு 2021-ம் ஆண்டுக்கான மேற்கண்ட விருதுகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 16-ம் தேதிக்குள் விண்ணப்ப படிவம் மற்றும் இதர சான்றிதழ்களை ஸ்கேன் செய்து www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து, surendra.yadav@nic.in, girnish.kumar@nic.in ஆகிய மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in