கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம் :

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் -  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துகாங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூரில் பெட்ரோல் பங்க்குகள் முன்பு நேற்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்றால் பொதுமக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், அத்தியாவசியத் தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படுவதை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.கோபி தலைமை வகித்தார்.இதேபோல, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருப்பூரில் உள்ள சுமார் 20 பெட்ரோல் பங்க்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரன் சாலையிலுள்ள பெட்ரோல்பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமைவகித்தார். இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட நூதன முறையில்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

உதகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in