

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி, சூளகிரியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் மட்டுமே என்பதை உணர்த்தும் வகையில் ஒலிப்பெருக்கியுடன் கூடிய விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரத்தை கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி ராஜூ தொடங்கிவைத்தார்.
பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. டிஎஸ்பி சரவணன், நகர இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்ஐ சிவசுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், உத்தனப்பள்ளி பேருந்து நிலையத்தில் எஸ்ஐ சரவணன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கபசுரக்குடிநீர் வழங்கி கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் ஓசூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீ ஸார் கரோனா விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.