காஞ்சிபுரத்தில்  2 அதிக திறன் உள்ள மின்மாற்றிகள் :

காஞ்சிபுரத்தில் 2 அதிக திறன் உள்ள மின்மாற்றிகள் :

Published on

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் அதிக திறன் உள்ள மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்மாற்றிகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அன்னை அஞ்சுகம், ஆனந்தாபேட்டை ஆகிய 2 இடங்களில் இருந்து 100 கே.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றிகள் இருந்தன. அன்னை அஞ்சுகம் மைதானத்தில் கரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தடையில்லா மின்சாரம் வேண்டும் என்பதற்காக மின்மாற்றியை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து மின்துறை சார்பில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. அந்த மின்மாற்றிகளை எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் திறந்து வைத்தார். திமுக மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகரச் செயலர் சன்பிராணட் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in