Published : 11 Jun 2021 03:14 am

Updated : 11 Jun 2021 03:14 am

 

Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

திட்டக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு :

சிறுமுளை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை தொடங்கிவைக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன்.

விருத்தாசலம்

திட்டக்குடி அருகே அரிகேரி கிராமத்தினர் வெலிங்டன் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீரைக் கொண்டு பாசன வசதி பெற்று வருகின்றனர்.

தாமதாக திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு நெல் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடையை முடித்துள்ளனர். வழக் கமாக அப்பகுதியில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்துள்ளனர்.


ஒரு வாரத்திற்கு மேலாகியும் அரசால் அரிகேரி நெல்கொள்முதல் நிலையம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் அங்கு தேங்கியுள்ளன.

கோடைக் காலத்தில் திடீரென பெய்யும் மழையால், நெல்மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் "இந்து தமிழ் திசையில்" செய்தியும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளின் கவலையைக் கருத்தில் கொண்டு, ஆதமங்கலம், சிறுமுளை, வையங் குடி ஆகிய கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் மையங்களை திட்டக் குடி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் தேன்மொழி, துணை மேலாளர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோடைக் காலத்தில் திடீரென பெய்யும் மழையால், நெல்மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x