

மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 652 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அரியலூரில் 108, கரூரில் 172, நாகை, மயிலாடுதுறையில் 504, பெரம்பலூரில் 112, புதுக்கோட்டையில் 182, தஞ்சாவூரில் 652, திருவாரூரில் 294, திருச்சியில் 470 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் 1, கரூர் 13, நாகை, மயிலாடுதுறை 7, பெரம்பலூர் 7, புதுக்கோட்டை 6, தஞ்சாவூர் 16, திருச்சி 8 என 58 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 1,009 பரிசோதனை முடிவுகளில் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 13,654 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,116 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.