Published : 11 Jun 2021 03:15 am

Updated : 11 Jun 2021 03:15 am

 

Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

ஆம்பூர் நகராட்சியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை? :

ஆம்பூர்

ஆம்பூரில் காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் நேற்று ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கடந்த 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதைத்தொடர்ந்து, கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஜவுளிக்கடைகள், நகைக்கடை களை தவிர்த்து தனியாக இயங் கக்கூடிய காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு அறிவித்ததை தொடர்ந்து கடைகள் தற்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 15 நாட்களாக அனைத்து கடை களும் மூடப்பட்டு தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங் கள் விற்பனைக்காக பல்வேறு இடங்களில் புழக்கத்தில் உள்ள தாக ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் ஆம்பூர் பஜார் பகுதி, நேதாஜி சாலை, உமர்சாலை, ஆம்பூர் கஸ்பா பகுதி, ரெட்டித்தோப்பு, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் மளிகைக்கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், பெட்டிக்கடைகள், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, காலாவதியான உணவுப்பொருட்களோ அல்லது குளிர்பானங்களோ விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் குளிர்பானங்களை நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் ஆய்வு செய்தார்.

பிறகு, மக்களுக்கு கேடு விளைவிக்கும் காலாவதியான உணவுப்பொருட்கள், குளிர்பானங் களை விற்பனை செய்வது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் குளிர்பானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்தார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x