Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

மதுவிலக்கு குற்றவாளிகளை நேரில் சந்தித்த எஸ்பி : மனம் திருந்தி வாழ அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோரை எஸ்.பி நேரில் சந்தித்து அறி வுரைகள் வழங்கினார்.

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. எனவே, டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட வில்லை. இந்நிலையில், தினமும் மதுவை விரும்புவோரை இலக்காக வைத்து சிலர் வெளிமாநில மதுபானங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர். மேலும் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தனர். இதுபோன்றவர்கள் மீது மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. 10.5.2021 முதல் தற்போது வரை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர் பாக 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக 381 ஆண்கள், 34 பெண்கள் என மொத்தம் 415 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 65 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்களை நேற்று நேரில் சந்தித்தார். காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின்போது, மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும்போது மேற்கொள்ளப்படும் கடும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி அவர்களை எஸ்.பி எச்சரித் தார். மேலும், மதுவிலக்கு குற்றங்களை கைவிட்டு திருந்தி வாழ விரும்புவோருக்கு அரசால் வழங்கப்படும் மறுவாழ்வு திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவான விளக்கங்களை அவர் அளித்தார். அதைத் தொடர்ந்து, மதுவிலக்கு குற்றங்களில் தொடர்புடைய பலர், ‘இனி மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதில்லை’ என்று உறுதி அளித்துச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி புஷ்பராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x