

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (31). இவர் போடி பங்கஜம் தெருவைச் சேர்ந்த தனது உறவினர் பிரவீன்குமாரை(19) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு போடியில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கோடாங்கிபட்டி அருகே வந்தபோது வீரபாண்டியில் இருந்து வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜ் அதே இடத்தில் இறந்தார். பலத்த காயமடைந்த பிரவீன்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
பழனிசெட்டிபட்டி போலீஸார் வேன் ஓட்டுநர் தெய்வேந்திரன்(28) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.