Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

130 கழைக் கூத்தாடி குடும்பங்களுக்கு - உதவிக்கரம் நீட்டிய கல்வித்துறை அலுவலர்கள் :

மானாமதுரை அருகே அம்மன் நகர், மாரியம்மன் நகர், கலைநகர் பகுதிகளில் 130 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசிக்கின்றன. கரோனா ஊரடங்கால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கே சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் அக்குடும்பங்களுக்கு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் குடும்பத்துக்கு தலா 5 கிலோ அரிசி, ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள், முகக்கவசம் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாநில இணைச் செயலர் கந்தசாமி தலைமையிலும், மாவட்ட இணைச் செயலர் சரவணன் முன்னிலையிலும் நடந்தது. நிவாரணப் பொருட்களை வட்டாட்சியர் தமிழரசன் வழங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பூங்குன்றப் பெருமாள், யசோதா , பட்டாபி நாகராஜன், தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் பொதுச் செயலர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x