மத்திய அரசு திட்டத்தின் கீழ் - ராமநாதபுரத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசி ஒதுக்கீடு :

மத்திய அரசு திட்டத்தின் கீழ் -  ராமநாதபுரத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசி ஒதுக்கீடு  :
Updated on
1 min read

கரோனா காலத்தையொட்டி மத்திய அரசின் உணவு தானியம் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 3,78,448 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. முதல் கட்ட நிவாரணத் தொகையான 2 ஆயிரம் ரூபாய் 99.66 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ. 2,000 ஜூன் 15-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக வரும் 11-ம் தேதியிலிருந்து வீடு வீடாக ரேஷன் கடைக்காரர்கள் டோக்கன் வழங்க உள்ளனர். அதனையடுத்து ஜூன் 15-ம் தேதி முதல் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படும்.

இந்நிலையில் குடும்ப அட்டைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், மத்திய அரசின் உணவு தானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரிசியையும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம் என வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in