Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் வேளாண் வல்லுநர்களை சேர்க்க கோரிக்கை :

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

முதல்வர் தலைமையில் செயல்படும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெயரஞ்சனை நியமித்துள்ளது பாராட்டுக்குரியது. மேலும், இந்தக் குழுவில் பொருளாதாரம், புள்ளியியல், ஆங்கில மற்றும் சித்த மருத்துவம், கலை, தொழில், அரசியல் என பல்துறை நிபுணர்களை புதிய உறுப்பினர்களாக முதல்வர் நியமித்துள்ளார்.

அதேநேரத்தில், இக்குழுவில் வேளாண் சார்ந்த நிபுணர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. வேளாண் நிபுணர்களோ, டெல்டா மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளோ இக்குழுவில் உறுப்பினராக இருந்தால்தான், விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயத் துறையின் தேவைகள், இயற்கை விவசாயம் போன்ற நவீனத்துவம் குறித்த அம்சங்களை முன்னெடுப்பதற்கு வழிகாட்ட முடியும்.

மேலும், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலை வரும்போது, இந்தக் குழுவில் வேளாண் பிரதிநிதிகள் இருந்தால்தான் இன்னும் வலு சேர்ப்பதாக இருக்கும். எனவே, முன்னோடி விவசாயிகள் அல்லது விவசாயம் சார்ந்த வல்லுநர்களை இக்குழுவில் இடம் பெறச் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x