

ஒரே மாதத்தில் 17 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போல்டன்புரத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி முனியசாமி தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற மாவட்டச் செயலாளர் சந்தனசேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன், ஏஐடியூசி நிர்வாகி பாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
எட்டயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்பாலமுருகன், எட்டயபுரம் நகரச்செயலாளர் சேது, ஏஐடியுசி செயலாளர் காளியப்பன், முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பு ஊசி நிறுவனத்தை தமிழக அரசிடம் வழங்கவேண்டும். தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையைஉடனடியாக வழங்க வேண்டும்.தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தது போல,பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பீடிதொழில் கூடங்களையும் திறக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.