கரோனா குறித்த விவரம் அறிய இணையதள சேவை தொடக்கம் :

கரோனா குறித்த விவரம் அறிய இணையதள சேவை தொடக்கம் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும் அறியும் வகையில் https://stopcoronatuti.in/ என்றஇணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் க இணையதள சேவையை தொடங்கி வைத்துகூறியதாவது:

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் https://stopcoronatuti.in/ என்ற இணையதளத்தில் கரோனாதொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தினசரி எடுக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை விவரம், தொற்று விவரம், குணமடைந்தோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தடுப்பூசி மருந்துகள் இருப்பு, தடுப்பூசி போடப்படும் இடம் குறித்த விவரம், காய்சல் மற்றும்கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டளை அறை தொடர்பு எண், உதவி மையங்களின் தொடர்பு எண்,இலவச தொலைபேசி எண்களை இச்சேவையில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என்றார்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in