அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 206 பேருக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எம்எல்ஏ கு.சின்னப்பா நேற்று முன்தினம் வழங்கினார். நகராட்சி ஆணையர் மனோகர், ஐஎம்ஏ தலைவர் எழில்நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.