Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை கால உழவுப்பணிகள் : வேளாண் இணை இயக்குநர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் ஈரத்தை பயன்படுத்தி மானாவரி சாகுபடி செய்ய கோடை உழவு பணிகள் தற்போது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

உழவுப்பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் டாபே டிராக்டர் நிறுவனம் இணைந்து இலவசமாக கோடை உழவு பணியினை மேற்கொள்கிறது.

ஜோலார்பேட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 300 விவசாயிகள் இலவச மாக கோடை உழவு பணிகள் மேற்கொள்ள முன்பதிவு செய் திருந்தனர். இதைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பணியாண்டப்பள்ளி கிராமத்தில் டாபே டிராக்டர் நிறுவனம் மூலம் கோடை உழவுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘‘திருப்பத் தூர் மாவட்டத்தில் இது போன்ற சேவை தேவைப்படும் விவசாயிகள் 1800 420 0100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு விவரம் தெரிவித்து முதலில் பதிவு செய்ய வேண்டும்.

அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நிலபரப்பில் உழவு பணி மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக விவரங்கள் தேவைப்படுவோர் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதுபோன்ற சலுகையை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஜோலார் பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் ராதா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி வேளாண் அலுவலர் ஹரிஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x