

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து 441 கனஅடியாக அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 49 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 441 கனஅடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 51 அடியில் 41.40 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றில் 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.