Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி - யூகோ வங்கியில் கரோனா பேரிடர் நடவடிக்கைகள் :

சென்னை

கரோனா பேரிடரை சமாளிக்கும் வகையில் யூகோ வங்கி பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, யூகோ வங்கியில் கடன் பெற்றவர்கள் கரோனா 2-வது அலையை சமாளிப்பதற்கான தேவைகள் குறித்து அறியப்பட்டது. இதுவரை 2,314 வாடிக்கையாளர்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடன் பெற்றவர்களில் தகுதியானவர்கள் கூடுதலாக 10 சதவீத கடனை வரும் செப்.30 வரை பெற உத்தரவாத அவசர கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

அவசர பணத் தேவைகளுக்காக யூகோ சஞ்சீவனி, யூகோ ஆரோக்யம், யூகோ கவச் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல யூகோவேக்சி-999 என்றடெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் கரோனா பாதிப்பால் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க வட்டியில்லா ஊதிய முன்பணம் வழங்கப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்துகொள்ள ஆகும் செலவு திருப்பி அளிக்கப்படுகிறது.

அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. தேவைக்குஏற்ப மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்துபணியாற்ற வழிசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வங்கி சார்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x