

கடலூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத் திட தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனால் நேற்று காலை6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப் பேட்டை, குறிஞ்சிப்பாடி, நெய் வேலி, புவனகிரி, முஷ்ணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதேபோல் பூக்கடைகள், வாகனம் பழுது நீக்கும் கடைகள்,எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிடவைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயங்கின. அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயக்கியது. சார்-பதிவாளர் அலுவலங்களில் 50 சதவீத டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது.