Published : 08 Jun 2021 03:14 am

Updated : 08 Jun 2021 03:14 am

 

Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

மதுரை அருகே வீட்டு கதவுகளை உடைத்து : 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு :

மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகிலுள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (53). இவர் சத்திரப் பட்டியில் மருந்துக்கடை நடத்துகிறார். கடந்த 6-ம் தேதி கடையை பூட்டிவிட்டு அவருடைய வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.25ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (39). இவரது கடந்த 30-ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x