4 கடைகளுக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம் :

4 கடைகளுக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் கோட்டாட்சியர் அழகர் சாமி, டிஎஸ்பி இளஞ்செழியன், நகராட்சி ஆணையர் கமலா, வட்டாட்சியர் தெய்வநாயகி ஆகியோர், நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மன்னார்குடி மேலராஜ வீதியில் மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடை, தாமரைக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி, கீழப் பாலம் பகுதியில் முடிதிருத்தும் கடை உட்பட 4 கடைகள் ஊரடங்கு விதிகளை மீறியது கண்டறியப்பட்டு, அந்தக் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட் துடன், அந்தக் கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in