Regional02
காருடன் 1,584 மதுபாட்டில்கள் பறிமுதல் :
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திருப்பத்தூர் கூட்டு ரோடு பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற காரை போலீஸார் நிறுத்தினர்.
அப்போது, ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். காரில் நடந்த சோதனையில், 33 பெட்டிகளில் 1,584 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காருடன் மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர் தொடர் பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
