விழுப்புரம் அருகே மண் பரிசோதனை முகாம் :

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தில் மண்மாதிரி பரிசோதனை முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தில் மண்மாதிரி பரிசோதனை முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் மண் பரிசோதனை முகாம் நடந்தது.

விழுப்புரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில் சொர்ணவாரி சாகுபடி தொடங்கும் வேளையில் மண் மாதிரி சேகரிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும், மண் மாதிரி பரிசோதனையின் அடிப்படையில் அடுத்த பயிருக்கு இட வேண்டிய உரத்தின் அளவை அறிந்து கொள்ளமுடியும் என்று எடுத்துரைத்தார்.

மண் மாதிரி, தண்ணீர் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள ஒரு மாதிரிக்கு ரூ. 20 வீதம் விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்மாதிரி ஆய்வகத்தில் கட்டணம் செலுத்தி ஆய்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நடமாடும் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜெரிகாட் மெர்ஸி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in