

திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர் கழகம், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் ஆகியவை சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது.
இதில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் புனித மரியன்னை தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர் கழகத் தலைவர் சண்முகம், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்க நிர்வாகி சாமி, பள்ளித் தாளாளர் அருள்தாஸ், ஆசிரியர் லாரன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.