இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தப்பட்ட - 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது :

இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தப்பட்ட -  2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது  :
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு மினி லாரியில் சிலர் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் வாகனச் சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கர்நாடக மாநிலப் பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 2,880 மதுபாட்டில்கள் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. மதுபாட்டில்கள் மற்றும் மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை கடத்தி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த இஸ்மாயில் (33), பால்பெர்ணான்டஸ் (30), பெங்களூருவைச் சேர்ந்த ஷேக் சல்மான் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in