

ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டுமென ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஏஐடியுசி தலைவர் எஸ்.சின்னசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்கள், அனைத்து வகை யான வாகன ஓட்டுநர்கள், சுமைதூக்குவோர், கைத்தறி, விசைத்தறி, தையல், சலவை, முடி திருத்துவோர், மண்பாண்டம் செய்வோர்உள்ளிட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி, கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் 17 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் ரூ.7500 வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித் துள்ளார்.