Published : 07 Jun 2021 03:15 am

Updated : 07 Jun 2021 03:15 am

 

Published : 07 Jun 2021 03:15 AM
Last Updated : 07 Jun 2021 03:15 AM

அத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது - காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் : சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ; 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

போக்குவரத்து காவல் துறையினரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர்.

சென்னை

சென்னை சேத்துப்பட்டில் போக்கு வரத்து காவல் துறையினரிடம் பெண் வழக்கறிஞர் ஒருவர் கடுமையாக வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சேத்துப்பட்டு காவல் துறையினர், தொடர்புடைய பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்தது. இதையடுத்து அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை சேத்துப்பட்டு சிக்னலில் சேத்துப் பட்டு போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஆனந்த், பிரபாகரன், ரஞ்சித் குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது சேத்துப்பட்டு குருசாமி பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்திதணிக்கை செய்தனர். காரில் பயணம் செய்த பெண்ணை காவலர் கள் விசாரித்தபோது, தான் மெரினா கடற்கரைக்கு மீன் வாங்கச் செல்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, “அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்ல அனுமதி இல்லை.எனவே, உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உங்களுடைய வாகன ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வேண்டும்” என காவல் துறையினர் கேட்டனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெண், போக்குவரத்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், செல்போன் மூலம் தனது வீட்டுக்கு தகவல்தெரிவித்தார். சிறிது நேரத்தில் சொகுசு காரில் வந்திறங்கிய அவரது தாயார், காவல் துறையினரை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார். மேலும், தனது மகளின் காரை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்றும், தான் ஒரு வழக்கறி ஞர் என்றும் கூறி காவல் துறையினரை திட்டத் தொடங்கினார்.

பின்னர், காவல் துறையினிரின் பேச்சையும் மீறி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தனது மகளின் காரை தடையை மீறி எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். காவல் துறையினர் விதித்த அபராதத் தொகைக்கான ரசீதையும் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் குமார் இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பேரிடர் காலத்தில் கரோனா தொற்றை பரப்பும் வகையில் வேண்டுமென்றே கவனக்குறைவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை யினர் தெரி வித் தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x