

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 363 நபர்களுக்கு ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. செல்லக்குமார் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் பெறப்பட்ட 9,293 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 603 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 7,688 மனுக்கள் நிலுவையிலும், 1002 மனுக்கள் மறுபரிசீலனை மேற்கொள்ளவும் தொடர் புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 363 நபர்களுக்கு ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், டிஆர்ஓ., சதீஸ், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பொறுப்பு அலுவலர், டி.ஆர்.ஓ., (நில எடுப்பு) சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.