ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது :

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது :
Updated on
1 min read

சோழவரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெகநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் மணிகண்டன். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் அகரம் கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் குடிநீர் தொட்டி அருகே இளைஞர்கள் 3 பேர் கஞ்சா போதையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடிதடியில் ஈடுபட்டனர்.

அத்துடன், அவ்வழியாகச் சென்றஇளம் பெண்களை கிண்டல் செய்ததுடன், குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஊராட்சி மன்றத் தலைவர்மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டித்தார்.

அதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனிடம் கத்தியைக் காட்டிகொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து, மணிகண்டன் சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அடிதடியில் ஈடுபட்ட ஜெகன்னாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தசரவணன், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு இளைஞரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in