காயிதே மில்லத்பிறந்த நாளையொட்டி : நலத்திட்ட உதவிகள் :

காயிதே மில்லத்பிறந்த நாளையொட்டி : நலத்திட்ட உதவிகள் :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 126-வது பிறந்தநாள் விழா நேற்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரிவு மற்றும் காயிதே மில்லத் சமூகநல அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டன.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்கறிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் கிராம நிர்வாக அதிகாரி சாந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியன் மாவட்ட செயலாளர் சிக்கந்தர், காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் ரியாஸ், ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in