பூந்தமல்லி கிளை சிறையில் கைதி உண்ணாவிரதம் :

பூந்தமல்லி கிளை சிறையில் கைதி உண்ணாவிரதம் :

Published on

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர் பாத்திரக் கடை மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2019-ல் மதமாற்றம் தொடர்பான பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை திருபுவனம் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர், இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் நிஜாம் அலி என்பவர் கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, தன்னை வேறு சிறைக்கு மாற்றக் கோரி கடந்தமாதம் 31-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிஜாம் அலியின் உடல்நலம் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக, போலீஸார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அதில், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நிஜாம் அலியை போலீஸார் மீண்டும் பூந்தமல்லி தனி கிளைச்சிறையில் அடைத்தனர். எனினும், நிஜாம் அலி சிறையில்சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in