செஞ்சி அருகே கிணற்றில் முதலை மீட்பு :

மீட்கப்பட்ட முதலை.
மீட்கப்பட்ட முதலை.
Updated on
1 min read

செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவர் நேற்று காலை தன் நிலத்திற்கு சென்றார். அப்போது, அவரின் திறந்தவெளி விவசாய கிணற்றில் முதலை ஒன்று நீந்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்தனர். பின்னர் கிணற்றில் இருந்த 2 அடி நீளமும், 5 கிலோஎடையும் கொண்ட பெண் முதலையை மீட்டு சிதம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். "கிணற் றின் அருகே சங்கராபரணி ஆறு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது, ஆற்றில் வந்த முதலை தவறி கிணற்றுக்குள் விழுந்து இருக்க வாய்ப்புண்டு" என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in