

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 34 ஆயிரத்து 441 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரத்து 708 பேர் குண மடைந்துள்ளனர். மாவட் டத்தில் நேற்று முன்தினம் வரையில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 514 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 3 லட்சத்து 75 ஆயிரத்து 874 பேர் கரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டனர். இதேபோல், 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மாவட்டத்தில் தயார் நிலையில் 2 ஆயிரத்து 502 படுக்கைகள் உள்ளன. இதுவரை கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 36 ஆயிரத்து 200 வசூலிக் கப்பட்டுள்ளது.