

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் 6 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கரோனா நோய் தடுப்பு பணிகளால், கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் 377 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 637 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது ஆண், 60 வயது பெண், 34 வயது ஆண், 49 வயது ஆண், 43 வயது ஆண் மற்றும் 48 வயது பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 441 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 ஆயிரத்து 708 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமையில் என 3 ஆயிரத்து 514 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.