

காரைக்கால்: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற நோக்கில், காரைக்கால் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நல்லம்பல் பகுதியில் 3 இடங்கள் மற்றும் காளிக்குப்பத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆட்சியர் அர்ஜூன் சர்மா நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, இப்பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள், நலவழித் துறை ஊழியர்கள், வட்டார வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டார். மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ்(வருவாய்), நலவழித் துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.