Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்க நிர்வாகிகள், நாகை மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது: நாகூரில் பிரதான சாலை, நாகூர் ஆண்டவர் தர்கா அருகில், புதுமனைத் தெரு ஆகிய இடங்களில் அஞ்சலகங்கள் இயங்கி வந்தன. இதில் புதுமனைத் தெரு மற்றும் நாகூர் ஆண்டவர் தர்கா அருகில் இயங்கி வந்த அஞ்சல் அலுவலகங்கள் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளன.
இதனால், நாகூர் தர்கா, புது மனைத் தெரு ஆகிய இடங்களில், அதிகமாக வாழும் முஸ்லிம் மக்கள், அதிக தொலைவில் உள்ள நாகூர் பிரதான சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கி உள்ள பெண்கள், பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நாகூர் தர்கா அஞ்சல் அலுவலகம் அல்லது புதுமனைத் தெருவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை தினமும், குறிப்பிட்ட நேரம் மட்டுமாவது திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT