வாகனங்களில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை :

வாகனங்களில் கோழி இறைச்சியை  விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை :
Updated on
1 min read

கோழி இறைச்சியை வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவித்து, பொதுமக்கள் பாதிக்க கூடாத வகையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது வரவேற்கத்தக்கது. ஆனால் அசைவ பிரியர்கள் குறிப்பாக கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் இறைச்சி கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட கோழிகள் அனைத்தும் பண்ணையிலேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி வாகனங்களில் அனுப்பி விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளதோ, அதேபோல் கோழி இறைச்சியையும் வாகனங்களில் எடுத்துச் சென்று, கரோனா தடுப்பு விதிமுறைக்கு உட்பட்டு விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in