

கரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி அமைப்பதற்காக எஸ்கேஎம் நிறுவனம் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளது.
சித்தா மற்றும் ஆயுர்வேதா மருந்துகளை தயாரிக்கும், முன்னோடி நிறுவனமான எஸ்கேஎம் நிறுவனம், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீர் மற்றும் உடல் ஊக்கம் அளிக்கும் பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.
கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக, ஆக்சிஜன் படுக்கை வசதி அமைப்பதற்காக, ஈரோடு எஸ்கேஎம் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநர் சிவ்குமார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், எஸ்கேஎம் முட்டைப்பவுடர் நிறுவனத்தின் சார்பாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதுபோல, இம்மாத தொடக்கத்தில் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைப்பதற்காக, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், எஸ்கேஎம் நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப் பட்டுள்ளது. மேலும் கரோனாவின் ஆரம்ப நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு, ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் மூலம் இலவசமாக கபசுரக் குடிநீர் மற்றும் தினமும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வருகிறது என எஸ்கேஎம் நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.